Bhagavatpada 2500th Aradhana Posters
பகவத்பாத 2500வது ஆராதனை சுவரொட்டிகள்
Links/சுட்டிகள் – संस्कृतम् (देवनागरी), தமிழ், తెలుగు, हिंदी
Shri Shankara Bhagavatpada was the “para-shiva-jnana-avatara” in Kali as said by Markandeya Samhita. His avatara was in Kalyabda 2594 Nandana year and attained siddhi in Kalyabda 2626 Raktaksha. His 2500th Aradhana was properly conducted at Shri Kamakoti Peetam which is His direct parampara in the current Kalyabda 5126 Krodhi year.
It is important to remember Shri Bhagavatpada’s period correctly to correctly understand our Bharatiya history. This is essential for us Bharatiyas to affirm the ancientness of our heritage and not diminish it ourselves.
Thus it was felt appropriate to release posters specifically marking the event. Devotees are encouraged to print out these and use for decorating their places of devotion. Currently these are provided in bilingual form in Samskritam, Tamil, Hindi and Telugu languages with English in all of them.
Links to other publications in view of this – 1) Markandeya Samhita, 2) Jagadguru Ratna Mala, 3) Jagadguru Parampara Stava, 4) compilation of pramanas showing Bhagavatpada’s connection to Kanchipuram with translation, 5) posters of the same, 6) compilation of over a hundred Prashasti verses extolling Bhagavatpada, 7) posters of some select verses from the same.
ஶ்ரீ ஶங்கர பகவத்பாதர் “பர ஶிவ ஜ்ஞான அவதாரம்” என்று மார்க்கண்டேய ஸம்ஹிதை சொல்கிறது. அன்னார் கல்யப்தம் 2594 நந்தன ௵ அவதரித்து கல்யப்தம் 2626 ரக்தாக்ஷ ௵ ஸித்தியடைந்தார். நிகழும் கல்யப்தம் 5126 க்ரோதி ௵ அன்னாரது 2500வது ஆராதனை அன்னாரது நேர் பரம்பரையான ஶ்ரீ காமகோடி பீடத்தில் யதாவத்தாக நடந்தேறியது.
ஶ்ரீ பகவத்பாதரின் காலத்தைச் சரியாக நினைவுகொள்வது நமது பாரதீய வரலாற்றைச் சரியாக புரிந்துகொள்வதற்கு மிக முக்கியமானதாகும். பாரதீயர்களாகிய நமக்கு நமது மரபின் ப்ராசீனத்துவத்தை நாமே குறைத்துக்கொள்ளாமல் வலியுறுத்துவதற்கு இது அவசியம்.
ஆகவே தனிப்பட்டு இந்த நிகழ்வைக் குறிக்க சுவரொட்டிகளை வெளியிடுவது தகும் என்று கருதப்பட்டது. பக்தர்கள் இவற்றை அச்சிட்டு தமது பக்தி ஸ்தலங்களை அலங்கரிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். தற்சமயம் இவை ஸம்ஸ்க்ருதம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிடம் அனைத்திலும் ஆங்கிலத்துடன் இருமொழி வடிவில் இவை அளிக்கப்படுகின்றன –
இதை முன்னிட்ட பிற வெளியீடுகளின் சுட்டிகள் – 1) மார்க்கண்டேய ஸம்ஹிதை, 2) ஜகத்குரு ரத்ன மாலை, 3) ஜகத்குரு பரம்பரா ஸ்தவம், 4) மொழிபெயர்ப்புடன் பகவத்பாதரின் காஞ்சீபுர தொடர்பைக் காட்டும் ப்ரமாணங்களின் தொகுப்பு, 5) அவற்றின் சுவரொட்டிகள், 6) பகவத்பாதரைப் புகழும் நூறுக்கும் மேற்பட்ட ப்ரஶஸ்தி ஶ்லோகங்களின் தொகுப்பு, 7) அவற்றிலிருந்து சிலவற்றின் சுவரொட்டிகள்.