Narasimha Jayanti

Shri Narasimha Jayanti
5126 Krodhi Vrshabha 9, 2024 May 22

ஶ்ரீ நரஸிம்ஹ ஜயந்தீ
5126 க்ரோதி ௵ வ்ருஷப ௴ 9 ௳, 2024 மே 22

Bhagavan Narasimha illustrates many things such that God is everywhere, yields to devotion, punishes sinners, removes suffering, is in fact non-dual and takes many forms purely by his Divine Maya Shakti.

Though it is the same God whatever be the form we worship, the shastras also advise to worship in a form according to the goal we seek. Acharya prays to Narasimha saying “You came to remove the suffering of Prahlada! Lend me Your hand!” Further in today’s difficult circumstances, removal of suffering and subjugation of evil forces is the main goal for us.

Hence, praying for that, let us pay obeisance, worship and praise Bhagavan Narasimha on Vaishakha Shukla Chaturdashi of the evening, the Jayanti He incarnated on, and receive His benevolence.


பகவான் நரஸிம்ஹர் பல தத்துவங்களை உணர்த்துகிறார் – இறைவன் எங்கும் இருப்பவன், பக்திக்கு இளகுபவன், துஷ்டர்களை சிக்ஷிப்பவன், கஷ்டங்களைப் போக்குபவன், உண்மையில் இரண்டற்றவன், திவ்யமான மாயா ஶக்தியினால் மட்டும் பல வடிவங்களாக காட்சியளிப்பவன் – என்றிவ்வாறு.

எந்த வடிவில் வணங்கினாலும் ஒரே இறைவன் தான் என்றாலும், நாம் எதிர்பார்க்கும் பலனுக்கேற்ற வடிவில் இறைவனை உபாஸிக்க வேண்டும் என்றும் ஶாஸ்த்ரத்தில் உள்ளது. “ப்ரஹ்லாதனின் கஷ்டத்தைப் போக்க வந்தவனே, நரஸிம்ஹா, எனக்கு கைகொடுப்பாய்!” என்று ஆசார்யாள் நரஸிம்ஹரை வேண்டுகிறார். மேலும் இன்றுள்ள சிரமமான சூழலில் கஷ்ட நிவ்ருத்தி, துஷ்ட சக்திகளை அடக்குவது என்பதே நமக்கு முக்கியமான பலனாகும்.

ஆகவே அதனை ப்ரார்த்தித்து நரஸிம்ஹர் ஆவிர்பவித்த ஜயந்தியான வைஶாக ஶுக்ல பக்ஷ மாலை நேர சதுர்தஶியன்று பகவான் நரஸிம்ஹரை வணங்கி பூஜித்து துதித்து அவர் அருளைப் பெறுவோம்.