Mahaperiyava Jayanti

Shri Chandrashekharendra Sarasvati Shricharana’s Jayanti #131
5126 Krodhi Vrishabha 11, 2024 May 24

ஸ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீசரணர்களின் ஜயந்தி #131
5126 க்ரோதி ௵ வ்ருஷப ௴ 11 ௳, 2024 மே 24

Shri Chandrashekharendra Sarasvati Shricharana, our 68th Jagadguru, had taken enormous efforts and protected the Veda and Vaidika Dharma which had much declined in the last century. Even at advanced age, He went on foot and established the Sanatana Dharma even in unseen villages.

He requested students from parents and joined them to Veda Adhyayana. He advised others to support Veda Adhyapaka-s and Vaidika-s. He created individual trusts for shastra-s, Veda Bhashya, Dharma Shastra, inscription research, supporting temple archaka-s etc.

He encouraged the establishment of goshala-s, vriddhashrama-s etc. He created the Pidi Arisi Thittam (handful of rice daily donation) as a simple way for Dharma. He popularized dharma-s such as writing Rama Nama.

Therefore, on His Jayanti, let us remember Him with gratitude and devotion, worship and receive His benevolence! A laghu puja paddhati along with other Guru Parampara Stotra-s is published in multiple scripts for this


நமது 68வது ஜகத்குரு ஶங்கராசார்யரான ஸ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீசரணர்கள் கடந்த நூற்றாண்டில் மிகவும் நலிவடைந்திருந்த வேதத்தையும் வைதிக தர்மத்தையும் பெருமுயற்சி எடுத்து ரக்ஷித்தவர். முதிர்ந்த வயதிலும் கால்நடையாகவே சென்று கண்காணாத ஊர்களிலும் ஸநாதன தர்மத்தை நிலைநாட்டியவர்.

பெற்றோரிடம் மாணவர்களைக் கேட்டுப் பெற்று வேத அத்யயனத்திற்கு சேர்த்தார். வேத அத்யாபகர்களையும் வைதிகர்களையும் பிறர் போஷிக்கும்படி அறிவுறுத்தினார். ஶாஸ்த்ரம், வேத பாஷ்யம், தர்ம ஶாஸ்த்ரம், கல்வெட்டு ஆராய்ச்சி, கோவில் பூஜகர்களை போஷிப்பது முதலியவற்றுக்கும் தனித்தனி அறக்கட்டளைகளை ஏற்படுத்தினார்.

கோசாலைகள், வ்ருத்தாஶ்ரமங்கள் முதலியவற்றையும் ஸ்தாபிக்க ஊக்குவித்தார். தர்மத்திற்கான எளிய வழியாக பிடியரிசித் திட்டத்தை உருவாக்கினார். ராம நாமம் எழுதுவது முதலிய தர்மங்களை பரப்பினார்.

ஆகவே அன்னாரது ஜயந்தியன்று, நன்றியுடனும் பக்தியுடனும் நினைவுகூர்ந்து பூஜித்து அவரது அருளைப் பெறுவோம்! இதற்கான ஒரு லகு பூஜா பத்ததி பிற குரு பரம்பரா ஸ்தோத்ரங்களுடன் பல லிபிகளில் வெளியிடப்படுகிறது