Amrita Siddhi

Amrita Siddhi Yoga Devi Parayanam
5126 Krodhi year

அம்ருத ஸித்தி யோக தேவி பாராயணம்
5126 க்ரோதி ௵

Time is the basis of all actions. As is well known, actions executed at the proper time bear more fruit.

In the cyclic rotation of time, along with the bad combinations of grahas and nakshatras that indicate the probability of upcoming difficulties, good combinations that grant benefits in multiples also arise. The sages who know this subtle nature of time have done us immeasurable anugraham by telling us about this via shastram. They have shown the way to protect ourselves for times when difficulties may arise, and to attain happiness by making efforts to do good deeds in beneficial times.

Among such good combinations are the Amrita Siddhi yogas of certain weekdays and nakshatras. They are Sunday-Hasta, Monday-Mrigashirsha, Monday-Shravana, Tuesday-Ashvini, Wednesday-Anuradha, Thursday-Pushya, Friday-Revati, Saturday-Rohini.

On these potent days, Shri Acharya Swamigal instructs to perform the following Devi-related parayanas as per achara and tradition and achieve both loka kshemam and one’s own kshemam.

Stotras for Parayanam (in multiple lipis) are given.


காலம் என்பது ஸகல செயல்களுக்கும் ஆதாரமாகும். “பருவத்தே பயிர்செய்” என்ற ஆன்றோர் வாக்கிற்கிணங்க உரிய நேரத்தில் செய்யப்படும் செயல்களுக்கு அதிக பலன் கிடைக்கிறது.

காலத்தின் தொடர்சுழற்சியில், நமக்கு சிரமங்கள் வரக்கூடியதை அறிவிக்கும் க்ரஹ நக்ஷத்ராதிகளின் தீய யோகங்களுடன், நன்மைகளை பன்மடங்கு அளிக்கவல்ல நல்யோகங்களும் ஏற்படுகின்றன. காலத்தின் இத்தகைய ஸூக்ஷ்மமான தன்மையை அறிந்த ருஷிகள் ஶாஸ்த்ரத்தின் மூலம் இதை நமக்கு போதித்து அளப்பரிய அனுக்ரஹத்தை செய்திருக்கிறார்கள். வருமுன் காப்போனாக சிரமங்கள் வரும் காலத்திற்கு பாதுகாப்பு செய்து கொள்ளவும் நன்மை பயக்கும் காலத்தில் முயன்று சுபகாரியங்களைச் செய்து மகிழவும் நமக்கு வழிகோலியுள்ளார்கள்.

அத்தகைய நல்யோகங்களில் கிழமைகள் மற்றும் நக்ஷத்ரங்களின் சில சேர்க்கைகள் அம்ருத ஸித்தி யோகங்கள் எனப்படுகின்றன. அவையாவன ஞாயிறு-ஹஸ்தம், திங்கள்-ம்ருகஶீர்ஷம், திங்கள்-திருவோணம், செவ்வாய்-அச்வினி, புதன்-அனுஷம், வியாழன்-பூசம், வெள்ளி-ரேவதி, சனி-ரோஹிணி என்பவை.

இத்தகைய வீரியம் மிகுந்த தினங்களன்று கீழ்கண்ட தேவீ பரமான பாராயணங்களை ஆசாரத்துடன் ஸம்ப்ரதாய முறைப்படி செய்து லோக க்ஷேமத்தையும் தனது க்ஷேமத்தையும் ஸாதித்துக்கொள்ளும்படி ஶ்ரீ ஆசார்யபாதர்கள் ஆஜ்ஞாபிக்கிறார்கள்.

பாராயணம் செய்வதற்கான ஸ்தோத்ரங்கள் பல லிபிகளில்
வெளியிடப்படுகிறது