Shri Jayendra Periyava Jayanti

Shri Jayendra Sarasvati Shricharana’s Jayanti #90
5126 Krodhi Kataka 8, 2024 July 23, Tuesday

ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீசரணர்களின் ஜயந்தி #90
5126 க்ரோதி ௵ கடக ௴ 8 ௳, 2024 ஜூலை 23, செவ்வாய்

Jagadguru Shankaracharya Shri Jayendra Sarasvati Shricharana was fondly revered as “Pudu Periyava”. His contributions to the sustenance of Sanatana Dharma and for Kamakoti Pitham innumerable. His munificience extended from the unlettered to great scholars.

He led a key role in the Rama Janma Bhumi movement which has resulted upto the completion of the Prana Pratishtha now. His Guru did the first shila puja and His Shishya blessed the yagashala of the Prana Pratishtha.

Let us remember His untiring efforts, benevolence and anugraha on His Jayanti, and submit our prostrations to our glorious Guru Parampara!


“புதுப்பெரியவர்கள்” என்று அன்புடன் அழைக்கப்பட்டவர்கள் ஜகத்குரு ஶங்கராசார்ய ஶ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதீ ஶ்ரீசரணர்கள். ஸநாதன தர்மம் தழைப்பதற்காகவும் ஶ்ரீ காமகோடி பீடத்திற்காகவும் அன்னார் செய்த பணிகள் கணக்கில் அடங்காதவை. அன்னாரது கொடைத்திறன் எழுத்து பழகாதவர்கள் முதல் பெரிய பண்டிதர்கள் வரை பரந்தது.

ராம ஜன்ம பூமி இயக்கத்தில் அன்னார் ஒரு ப்ரதான பங்கு வகித்தார். அதன் பலனாக ப்ராண ப்ரதிஷ்டை வரை தற்சமயம் நிறைவேறிவிட்டது. அன்னாரது குரு முதல் ஶிலா பூஜையைச் செய்தார். அன்னாரது சீடர் ப்ராண ப்ரதிஷ்டையின் யாக ஶாலையை ஆசீர்வதித்தார்.

அன்னாரின் அயராத உழைப்பையும் கருணையையும் அனுக்ரஹத்தையும் நினைவு கூர்ந்து அன்னாரது ஜயந்தியன்று அன்னாரை வணங்கி, பெருமை மிக்க நம் குரு பரம்பரைக்கு நம் வந்தனங்களைச் செலுத்துவோமாக.