Shri Bhagavannama Bodhendra Smaranam

Shri Bhagavannama Bodhendra Smaranam
(Aradhana – 5126 Krodhi Kanya 1, 2024-Sep-17)

ஶ்ரீ பகவந்நாம போதேந்த்ர ஸ்மரணம்
(ஆராதனை – 5126 க்ரோதி ௵ புரட்டாசி ௴ 1 ௳, 2024-செப்-17)

The 59th Jagadguru of our Acharya Peetam, Shri Bodhendra Sarasvati Shankaracharya, taught the greatness of Bhagavannama which is very important in the Kali Yuga. It is the only dharma which is easy for everyone but will bear full fruit even if flaws occur. This Acharya composed texts establishing this Bhagavannama Mahima.

He also composed texts on Advaita and devotional stuti-s. Records show that He performed the Tatanka Pratishtha to Devi Akhilandeshvari and Vijaya Yatra to Rameshvara.

In view of the Aradhana of the Acharya on Bhadrapada Purnima, verses on Him from Kamakoti Peetam pramana texts and some verses from His works are published for anusandhana by bhakta-s.


நமது ஆசார்ய பீடத்தின் 59வது ஜகத்குரு ஶ்ரீ போதேந்த்ர ஸரஸ்வதீ ஶங்கராசார்யர் கலியுகத்தில் மிக முக்கியமானதான பகவந்நாமத்தின் மஹிமையை விஶேஷமாக ப்ரச்சாரம் செய்தார். இந்த தர்மம் மட்டுமே அனைவருக்கும் எளியது, மற்றும் குறைகள் ஏற்பட்டாலும் முழு பலன் கொடுக்கும். இத்தகைய பகவந்நாம மஹிமையை நிரூபித்து இவ்வாசார்யர் நூல்கள் இயற்றினார்.

அன்னார் அத்வைதம் குறித்த நூல்களையும் பக்தி ஸ்துதிகளையும் கூட இயற்றியுள்ளார். மேலும் அன்னார் அகிலாண்டேஶ்வரி தேவிக்கு தாடங்க ப்ரதிஷ்டையும் ராமேஶ்வரத்திற்கு விஜய யாத்ரையும் செய்ததை ஆவணங்கள் காட்டுகின்றன.

பாத்ரபத பூர்ணிமையன்று இவ்வாசார்யரின் ஆராதனையை முன்னிட்டு அன்னாரைப் பற்றி காமகோடி பீடத்து ப்ரமாண நூல்களில் உள்ள ஶ்லோகங்களும் இவரது நூல்களிலிருந்து சில ஶ்லோகங்களும் பக்தர்களின் அனுசந்தானத்திற்காக வெளியிடப்படுகின்றன.