Panchanga Puja

5127 Vishvavasu New Year Panchanga Puja
5127 விஶ்வாவஸு புத்தாண்டு பஞ்சாங்க பூஜா

Chaitra Shukla Prathama (Ugadi) / சைத்ர ஶுக்ல ப்ரதமா (உகாதி)
2025-03-30

Mesha 01 (Mesha Sankranti) / சித்திரை 01 (மேஷ ஸங்க்ராந்தி)
2025-04-14

“Our new year is on Chithirai / Chaitra!”

“நமது புத்தாண்டு சித்திரையில் (சைத்ரத்தில்) தானே!”


ஆகாயத்தில் உள்ள நக்ஷத்ரங்களின் கூட்டமைப்பையும் அவற்றுள் ஸூர்ய சந்த்ரர்களின் ஸஞ்சாரத்தையும் ஆதாரமாகக் கொண்டு விளங்குவது நமது பண்டைய கால கணிப்பு முறை. நமது வருடம் மாதம் நாள் திதி கிழமை நக்ஷத்ரம் யோகம் கரணம் – அனைத்தும் வானவியல் ஆதாரம் கொண்டது. இதனைக் கொண்டு நமது நன்மைக்கான ஸகல அனுஷ்டானங்களையும் சுப காரியங்களையும் அமைத்துக்கொள்ளச் சொல்கிறது ஶாஸ்த்ரம். ஆகவே பஞ்சாங்கத்தைப் பயன்படுத்த நாம் அனைவரும் கற்க வேண்டும்.

மேலும் புதிய வருடமானது துன்பங்கள் அற்றதாகவும் இன்பங்கள் மிகுந்ததாகவும் வாழ்வில் முன்னேற்றத்தைக் கொடுப்பதாகவும் இருப்பதற்காக ப்ரார்த்தித்து நாம் வருடத்தின் தொடக்கத்தில் செய்வதே பஞ்சாங்க படனம் என்பது. வருடம் முதலியவற்றுக்கு ஶாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட தேவதைகளை பஞ்சாங்க புஸ்தகத்தில் ஆவாஹனம் செய்து பூஜித்து புதிய பஞ்சாங்கத்தை முறைப்படி வாசிக்க வேண்டும். இதற்கான ஒரு எளிய பூஜா பத்ததி தற்சமயம் வெளியிடப்படுகிறது.