Guru Ratna Mala

Jagadguru Ratna Mala

ஜகத்குரு ரத்ன மாலை

Shri Sadashivendra Sarasvati Shricharana, famous as Shri Sadashiva Brahmendra, was the disciple of Shri Paramashivendra Sarasvati Shankaracharya Shricharana, 57th Jagadguru of this Peetam. This has been recorded by the 65th Jagadguru Shri Sudarshana Mahadevendra Sarasvati Shricharana (in the Jagadguru Parampara Stava He composed).

As Shri Sadashivendra Shricharana was steeped in antarmukha trance, He did not take up peetadhipatyam. However, as per the request of the next peetadhipati, He blessed us with the Jagadguru Ratna Mala, by praising the Guru Parampara upto His Gurunatha.

Shri Sadashivendra repeatedly says brimming with devotion that it was only due to Guru Kripa that He attained jnana. Let us do anusandhana of the words of this jnani par excellence and guru bhakta par excellence, and gain the wealth of Guru Bhakti.

For this the Jagadguru Ratna Mala is published in multiple scripts as PDF files. Further, a Sangraha of the Shri Shankara Bhagavatpada Katha presented in it has been given in 16 simple verses in its commentary Sushama. This has also been included here.


இப்பீடத்தின் 57வது ஜகத்குருவான ஶ்ரீ பரமஶிவேந்த்ர ஸரஸ்வதீ ஶங்கராசார்ய ஶ்ரீசரணர்களின் ஶிஷ்யரே ஶ்ரீ ஸதாஶிவ ப்ரஹ்மேந்த்ரர் என்று ப்ரஸித்தி பெற்ற ஶ்ரீ ஸதாஶிவேந்த்ர ஸரஸ்வதீ ஶ்ரீசரணர். இதை 65வது ஜகத்குருவான ஶ்ரீ ஸுதர்ஶன மஹாதேவேந்த்ர ஸரஸ்வதீ ஶ்ரீசரணர் (தாம் இயற்றிய ஜகத்குரு பரம்பரா ஸ்தவத்தில்) பதிவிட்டுள்ளார்.

ஶ்ரீ ஸதாஶிவேந்த்ர ஶ்ரீசரணர் அந்தர்முக நிஷ்டை மேலிட்டதால் பீடாதிபத்யத்தை மேற்கொள்ளவில்லை. இருப்பினும் அடுத்த பீடாதிபதியின் வேண்டுகோளின்படி தமது குருநாதர் வரையில் குரு பரம்பரையைத் துதித்து அவர் நமக்கு அருளியதே ஜகத்குரு ரத்ன மாலை.

தமக்கு ஞானம் கிடைத்தது குருவின் கருணையால் தான் என்று பற்பல முறை பக்தி ததும்பக் கூறுபவர் ஶ்ரீ ஸதாஶிவேந்த்ரர். ஞானி ஶ்ரேஷ்டரும் குருபக்த ஶ்ரேஷ்டருமான அவரது வாக்கை அனுஸந்தானம் செய்து நாமும் குருபக்தியெனும் செல்வத்தைப் பெறுவோம்.

இதற்காக ஜகத்குரு ரத்ன மாலையானது பல லிபிகளில் PDF கோப்புகளாக வெளியிடப்படுகிறது. மேலும் அதில் சொல்லப்பட்ட ஶ்ரீ ஶங்கர பகவத்பாத கதையின் ஸங்க்ரஹம் அதன் வ்யாக்யானமாகிய ஸுஷமாவில் 16 எளிய செய்யுள்களாக கொடுக்கப்பட்டுள்ளது. இதுவும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.