Feedback


Shrimad Adya Shankara Bhagavatpadacharya Paramparagatam
Shri Kanchi Kamakoti Moolamnaya Sarvajna Peetam
Jagadguru Shankaracharya Shrimatam Samsthanam
Veda Dharma Shastra Paripalana Sabha

Jaya Jaya Shankara! Hara Hara Shankara!

ஶ்ரீமத் ஆத்ய ஶங்கர பகவத்பாதாசார்ய பரம்பராகதம்
ஶ்ரீ காஞ்சீ காமகோடி மூலாம்நாய ஸர்வஜ்ஞ பீடம்
ஜகத்குரு ஶங்கராசார்ய ஶ்ரீமடம் ஸம்ஸ்தானம்
வேதத தர்ம ஶாஸ்த்ர பரிபாலன ஸபை
ஜய ஜய ஶங்கர! ஹர ஹர ஶங்கர!

Request for feedback on documents

கோப்புகளைப் பற்றிய பின்னூட்டத்திற்கு வேண்டுகோள்

The Veda Dharma Shastra Paripalana Sabha was established in 1942 by Jagadguru Shri Chandrashekharendra Sarasvati Shankaracharya Swamigal. The goal of Paripalana of the Veda and the Dharma Shastra is pursued since then via periodic Sammelana-s which include Veda Parayana and Dharma Shastra upanyasa-s giving practical guidance on anushthana.

As per the blessings of Jagadguru Shri Jayendra Sarasvati Shankaracharya Swamigal and Jagadguru Shri Shankara Vijayendra Sarasvati Shankaracharya Swamigal, Vishesha Upanyasams or special talks by scholars apart from sammelana-s were started in 2014. Starting two years later, these were also livestreamed to be useful to astika-s everywhere.

Since 2019, documents are been published online in multiple scripts for occasions such as Grahana-s, Uttarayana Surya Puja, Nutana Vatsara Panchanga Patanam, Dipavali, Acharya Jayanti-s, and other anushthana occasions. A volunteer team has been working in compiling information, translation, editing and typesetting for this.

So we request users to give feedback regarding these documents using either one of the above forms:

ஜகத்குரு ஶ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதீ ஶங்கராசார்ய ஸ்வாமிகளால் 1942ல் வேத தர்ம ஶாஸ்த்ர பரிபாலன ஸபை தொடங்கப்பட்டது. பெயருக்கேற்ப, வேதத்தையும் தர்ம ஶாஸ்த்ரத்தையும் பரிபாலிப்பதாகிய லக்ஷ்யத்தை நோக்கி அவ்வப்போது வேத பாராயணங்களும் அனுஷ்டானத்திற்கான செயல்முறை வழிகாட்டுதல் அளிப்பதற்கு தர்ம ஶாஸ்த்ர உபந்யாஸங்களும் அடங்கிய ஸம்மேளனங்கள் அதுமுதல் நடத்தப்படுகின்றன.

ஜகத்குரு ஶ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதீ ஶங்கராசார்ய ஸ்வாமிகள் மற்றும் ஜகத்குரு ஶ்ரீ ஶங்கர விஜயேந்த்ர ஸரஸ்வதீ ஶங்கராசார்ய ஸ்வாமிகளின் அனுக்ரஹத்துடன், ஸம்மேளனத்தைத் தவிர தனியாக விஶேஷ உபந்யாஸங்கள் 2014ல் தொடங்கப்பட்டன. இரண்டு வருடங்கள் கழித்து, எங்குமிருக்கும் ஆஸ்திகர்களுக்கு பயன்படும்படி இவற்றை நேரடி ஒளிபரப்புவது தொடங்கப்பட்டது.

2019-லிருந்து க்ரஹணங்கள், உத்தராயண ஸூர்ய பூஜை, புது வருட பஞ்சாங்க படனம், தீபாவளி, ஆசார்ய ஜயந்திகள் மற்றும் பிற அனுஷ்டான தருணங்களுக்கு இணையவழியாக பல லிபிகளில் கோப்புகள் வெளியிடப்பட்டுவருகின்றன. இதற்காக தகவல் திரட்டுவது, மொழிபெயர்த்தல், தொகுத்தல், அச்சுக்கோத்தல் ஆகியவற்றில் ஒரு தன்னார்வக் குழு உழைத்துவருகிறது.

ஆகவே மேலேயுள்ள படிவங்களில் *ஏதேனும் ஒன்றனைப்* பயன்படுத்தி இந்த கோப்புகளைக் குறித்த பின்னூட்டம் அளிக்கும்படி பயனீட்டாளர்களை வேண்டுகிறோம்.


]]>