Kumbha Mela Prayaga Snana
5126 Krodhi / Dhanus 29–Kumbha 14 / 2025-Jan-13–2025-Feb-27
கும்ப மேளா ப்ரயாக ஸ்நானம்
5126 க்ரோதி ௵ மார்கழி ௴ 29 ~ மாசி 14 (2025 ஜன 13 ~ பிப் 27)
The Veda itself extols Bhagavan as “one who resides in tirtha”. Among the dharma-s one can perform to absolve of all sins and attain all auspiciousness the easiest is tirtha snanam. Even therein the Ganga Yamuna Sarasvati Sangama famed as Prayagraj is very sacred. So that those bathing there might obtain gopura darshana koti punya, our Shri Kamakoti Peetadhipati-s have erected Shankara Vimana Mandapa visible from the sangama.
About 12 years once, when Brihaspati comes to Vrishabha rashi, a particular period around when Surya is in Makara rashi, is considered Kumbha Yoga at Prayagraj. This is celebrated as a very large sangama of dharmika-s by the name of Kumbha Mela. To facilitate those who do Kumbha Mela snana, a snana paddhati with shlokas and Prayagaraja Stotra is published.
வேதமே பகவானை “தீர்த்தத்தில் இருப்பவர்” என்று துதிக்கிறது. சகல பாபங்களையும் தொலைத்து சகல மங்களங்களையும் அடைய செய்யக்கூடிய தர்மங்களில் மிக சுலபமானது தீர்த்த ஸ்நானம். அதிலும் ப்ரயாக ராஜம் என்று போற்றப்படும் கங்கா யமுநா ஸரஸ்வதீ ஸங்கமம் மிகவும் புண்யம். அங்கு ஸ்நானம் செய்பவர்கள் கோபுர தர்ஶந கோடி புண்யத்தையும் பெறும்படி நமது ஶ்ரீ காமகோடி பீடாதிபதிகள் ஸங்கமத்திலிருந்து தெரியும் வண்ணம் ஶங்கர விமான மண்டபம் அமைத்துள்ளார்கள்.
சுமார் 12 வருடங்களுக்கு ஒரு முறை ப்ருஹஸ்பதி வ்ருஷப ராசிக்கு வருகையில் ஸூர்யன் மகர ராசியில் இருப்பதை ஒட்டிய ஒரு குறிப்பிட்ட காலம் கும்ப யோகம் என்று ப்ரயாக ராஜத்தில் கருதப்படுகிறது. கும்ப மேளா என்ற பெயரில் மிகப்பெரியதொரு தார்மிகர்களின் ஸங்கமமாகவும் இது கொண்டாடப்படுகிறது. இத்தகைய கும்ப மேளா ஸ்நானம் செய்பவர்களுக்கு அனுகூலமான முறையில் ஶ்லோகங்கள் கூடிய ஸ்நான பத்ததியும் ப்ரயாக ராஜ ஸ்தோத்ரமும் வெளியிடப்படுகிறது.