தர்மத்தின் மூலம் வேதம் (வேதோ³கி²லோ த⁴ர்ம மூலம்) என்பது ஸ்ம்ருதி. “வேதோ³ நித்யம் அதீ⁴யதாம் தது³தி³தம் கர்ம
ஸ்வனுஷ்டீ²யதாம்” என்பது ஆதிசங்கரர் வாக்கு. அதாவது நான்கு புருஷார்த்தங்களுள் தர்மம் தான் தலாவதாகும்.முதல் படி மிதிக்காமல் மோக்ஷம் என்கிற நான்காவது புருஷார்த்தத்தை அடைய முடியாது. ஆகையால் தர்மத்தை கூறும் வேதத்தை நன்கு கற்று “கற்றபின் நிற்க அதற்குத் தக” என்ற வள்ளுவர் வாக்குப்படி வேதத்தில் சொல்லப்பட்ட கர்மானுஷ்டானங்களை நன்கு தவறு இல்லாமல் செய்ய வேண்டும். வேதாத்யயனம் சிறிதளவாவது செய்ய வேண்டும். ஸ்வதர்மத்தை ஒருபொழுதும் விடக்கூடாது. ”
“வேத³விதே கில த³த்தம் த³த்தம்” அதாவது வேதவித்துக்குக் கொடுத்தது தான் கொடுத்தது என்றாகுமாம். அதனால் புண்யத்தை சம்பாதிக்க இது ஓர் அரிய வாய்ப்பு.
கர்மானுஷ்டானங்கள் நமது வாழ்க்கையோடு இணைந்தது. அதை முறைப்படி செய்யும்போது முழுப்பலனை அடைய முடியும் என்ற மஹரிஷிகளின் கருத்தை வலியுறுத்தும் வகையில் காலை மாலை வேதபாராயணங்களும் தினமும் உபந்யாஸங்களும் நடைபெறும்.