நமது ஸநாதன தர்மத்திற்கு ஆணிவேராக விளங்குவது வேதம் தர்ம சாஸ்த்ரம் ஆகிய இரண்டும் தான். நமக்கு விதிக்கப்பட்ட ஒரு கர்மாவைச் செய்யவேண்டும் என்றால் எப்படிச் செய்ய வேண்டும்? வேதத்தில் விதிக்கப்பட்ட கர்மாக்களை எவ்வாறு சரிவரச் செய்வது என்று வேதத்தில் எங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நமக்குத் தெரியாது. அதைச் செய்வதற்கான வரைமுறைகள் என்ன என்பதும் தெரியாது. வேதத்தில் அவற்றைத் தேடுவதென்பது ஒரு பரந்த ஸமுத்ரத்தில் ஒன்றைத் தேடுவதைப் போன்றது. அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? இந்த கேள்விக்கு விடை அளிப்பவை தான் தர்மசாஸ்த்ரங்கள்.
வேதங்களிலும் தர்ம சாஸ்த்ரங்களிலும் சொல்லப்பட்ட வைதீக கர்மாக்களில் ஏற்படும் ஸந்தேஹங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அவர்களின் பரிபூரண அனுகிரஹத்துடன் பிரதி மாதம் “வேத ஸம்மேளனம்”, பிரதி வாரம் “விசேஷ உபந்யாசம்”, பிரதி தினம் “ஸ்ம்ருதி ஸந்தேசம்” நடக்கின்ற வரிசையில் “தர்ம சாஸ்த்ர ஸதஸ்” நடத்தப்படுகிறது