நமது ஸநாதன தர்மத்திற்கு ஆணிவேராக விளங்குவது வேதம் தர்மசாஸ்திரம் ஆகிய இவை இரண்டும் தான். மனித வாழ்வின் அனைத்து அம்சங்களையும் இணைக்கும் வேததர்மம் நித்யமானது. ஒரு மனிதன் துன்பமின்றி அர்த்தமுள்ளதாகவும் சாந்தமாகவும் வாழ்வது எப்படி என்று வேதம் கோடிட்டுக் காட்டியுள்ளது. வேதமானது ஒவ்வொருவரையும் தத்தம் கர்மாநுஷ்டானங்களைச் செய்யத் தூண்டி தனிமனிதனின் ஆன்மிக நல்வாழ்வுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நன்மை பயக்கத் தூண்டுகிறது. இவ்வாறு வேததர்மம் தனிமனித நலனைத் தாண்டி உலகுக்கே நன்மை செய்கிறது. இவை இரண்டும் அழியாமல் காக்கப்படவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்வாமிகளால் 1942 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாளில் வேத தர்ம சாஸ்திர பரிபாலன ஸபை என்ற அமைப்பை கும்பகோணத்தில் ஏற்படுத்தினார்கள்.
இதன் மூலம் இன்றளவும் அனேக முக்கிய இடங்களில் வேத பாராயணங்களும் தர்ம சாஸ்த்ர உபன்யாஸங்களும் நடைபெற்று வருகின்றன.
ஏன் வேததர்மம்?
வேதம் என்பது நமது தர்மத்தின் ஆணிவேர். ஒரு மனிதனை உன்னத நிலைக்கு உயர்த்த வேதம் தான் ஒழுக்கத்தைக் கற்பிக்கிறது. வேதங்கள் என்ற அந்த வேர்கள் நம் பண்டைய ரிஷிகளால் மனிதர்களின் நலத்திற்காக சொல்லப்பட்டது.
I) வேதம் ஏன் தழைக்க வேண்டும்?
• வேத மந்த்ரங்கள் , யஜ்ஞங்களிலிருந்து வரும் சப்தங்கள் உலகில் ஒலித்துக் கொண்டிருந்தால், எல்லோருக்கும் நலன் ஏற்படும்.
• ஒற்றுமையும் சாந்தியும் ஏற்பட வேண்டும் என்றால், எல்லா தேசத்து மக்களும் வேதம் என்பது உலகிற்கே பொதுவானது என்று அறிய வேண்டும்.
• மனிதவாழ்க்கையின் அனைத்து அம்சங்களுக்குமான வேததர்மம் நித்யமானது. ஒருவர் தன் வாழ்க்கையை சீராகவும் ஸார்த்தகமாகவும் சந்தோஷமாகவும் அமைத்துக் கொள்ளவும் எப்படி வாழ வேண்டும் என்பதையும் வேதங்கள் விதிக்கின்றன.
• வேதம் ஒவ்வொருவரையும் தத்தம் ஆத்மவளர்ச்சிக்காகவும் உலக நன்மைக்காகவும் கர்மாநுஷ்டானம் செய்யத் தூண்டுகிறது.
• வேதமந்திரங்களின் அர்த்தங்கள் கருத்தாழம் கொண்டவை அது மட்டும் இல்லை, அவற்றின் சப்தமும் அதே அளவு முக்யத்வம் வாய்ந்தவை. அந்த சப்தத்திற்கும் தனியே சக்தியும் பலனும் நிச்சயம் உண்டு
II) ஏன் வேதம் காக்கப்படவேண்டும் ?
• மக்களிடையே நல்ல எண்ணங்களை உருவாக்க நல்ல விஷயங்கள் வேண்டும். அப்படிப்பட்டவற்றை உருவாக்க அதற்குத் தேவையான சப்தங்கள் தேவை. அத்தகைய சப்தங்களால் தான் நல்ல எண்ணங்கள் மனிதர்களின் மனத்தில் தோன்றும். வேத மந்த்ரங்கள் தான் அவ்வாறு நல்லெண்ணத்தைத் தோற்றுவிக்கக் கூடிய சப்தங்கள்.
• மனிதர்களின் ப்ரத்யக்ஷத்திற்கும் அனுமானத்திற்கும் அப்பால் உள்ள விஷயங்களை பற்றிப் பேசுவதே வேதத்தின் நோக்கம்.
• வேதம் ஈஸ்வரனின் மூச்சுக்காற்று. வேதமின்றி ப்ரஹ்மம் இல்லை. இன்னும் சொல்லவேண்டுமென்றால் பரமாத்மாவைப் போல் வேதமும் ஸ்வப்ரகாசமானது.
• அர்த்தம் புரியாவிட்டாலும் உலகிற்கு சப்தத்தின் வாயிலாகவே லோகக்ஷேமத்தை அளிக்கும். சில மந்த்ரங்களின் அர்த்தத்தை விட சப்தமே உயர்வானவை.
• நம் நாட்டில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் வளமும் சாந்தமும் இம்மைக்கும் மறுமைக்கும் பெற ஸ்ரீ மஹாபெரியவா வேதரக்ஷணத்தை எப்போதும் வலியுறுத்தினார்கள்.
• இந்த மந்த்ர ஒலிகள் காற்றுமண்டலத்தில் ஒலித்தால் மிகவும் நன்மை பயக்கும். ஸ்வரமும் ஒலியும் சேர்ந்து ப்ரபஞ்சத்திற்கு வளமளிக்கும்.
III) யார் வேதத்தை பாதுகாக்க வேண்டும் ?
• குயவன் பாண்டம் செய்கிறான். மாடு மேய்ப்பவர் பால் கொண்டு வருகிறார்கள், குடியானவர்கள் நிலத்தை உழுது, அதில் கிடைக்கும் தான்யத்தால் எல்லோரும் உண்ணும்படி செய்கிறார்கள். எல்லோரும் சமுதாயத்திற்காக ஏதேனும் ப்ரயோஜனமான கார்யம் செய்கிறார்கள். இதில் ஸமூஹத்தில் ப்ராஹ்மணர்களின் பங்கு என்ன?
• வேதத்தில் பொதிந்துள்ள நம் ஸநாதன தர்மம் என்றும் சுத்தத்துடன் காக்கப்பட வேண்டும். இத்தகைய வேத விளக்கை என்றென்றும் ப்ரகாசித்துக் கொண்டே இருக்கும்படி செய்ய தங்களால் இயன்றதைச் செய்வதே ப்ராஹ்மணர்களின் கடமை
• சாஸ்த்ரங்கள் ப்ராஹ்மணர்களுக்கு வைதிக யஜ்ஞங்கள் முதலியவற்றைச் செய்யும் பொறுப்பையும் விதித்துள்ளன. வேதத்தின் களஞ்சியமாக உள்ள ப்ராஹ்மணர்கள் உலகின் க்ஷேமத்திற்காக, எளிமையான அனுஷ்டானங்கள் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து வேதாத்யயனம் , வேதங்கள், மற்ற சாஸ்த்ரங்களைப் (வேதார்த்தத்தை புரிந்துக் கொள்ள) படித்து தேவதைகளை வழிபட்டு பிறருக்கும் தெய்வங்கள் மூலம் நன்மை செய்வதற்காகவே உள்ளனர்.
• அவர்கள் பிறரை ஆளவும் கட்டுப்படுத்தவும் உரிய ஸமூஹம் என்று எங்குமே சொல்லப்படவில்லை. இந்நாட்டின் ஒற்றுமைக்காகவும் உலக ஒற்றுமைக்காகவும் ப்ராஹ்மணன் இந்த ஸநாதனமான தர்மத்தை ரக்ஷிக்க வேண்டும்.
• வேதத்தில் பொதிந்துள்ள நம் ஸநாதன தர்மம் என்றும் சுத்தத்துடன் காக்கப்பட வேண்டும். இத்தகைய வேத விளக்கை என்றென்றும் ப்ரகாசித்துக் கொண்டே இருக்கும்படி செய்ய தங்களால் இயன்றதைச் செய்வதே ப்ராஹ்மணர்களின் கடமை
• சாஸ்த்ரங்கள் ப்ராஹ்மணர்களுக்கு வைதிக யஜ்ஞங்கள் முதலியவற்றைச் செய்யும் பொறுப்பையும் விதித்துள்ளன. வேதத்தின் களஞ்சியமாக உள்ள ப்ராஹ்மணர்கள் உலகின் க்ஷேமத்திற்காகவும், எளிமையான அனுஷ்டானங்கள் நிறைந்த வாழ்க்கையும் வாழ்ந்து வேதாத்யயனம் , வேதங்கள், மற்ற சாஸ்த்ரங்கள் (வேதார்த்தத்தை புரிந்துக் கொள்ள) படித்து தேவதைகளை வழிபட்டு பிறருக்கும் தெய்வங்கள் நன்மை செய்வதற்காகவே உள்ளனர்.
• அவர்கள் பிறரை ஆளவும் கட்டுப்படுத்தவும் உரிய ஸமூஹம் என்று எங்குமே சொல்லப்படவில்லை. இந்நாட்டின் ஒற்றுமைக்காகவும் உலக ஒற்றுமைக்காகவும் ப்ராஹ்மணன் ஸநாதனமான
இந்த தர்மத்தை ரக்ஷிக்க வேண்டும்.
• நம் தேசத்தில் உள்ள ஒரு சிறிய ஸமூஹம் எப்படி லோகக்ஷேமத்தை உண்டு பண்ணும் என்று சிலர் கேட்கக்கூடும். மின்விசை உற்பத்தி செய்யும் இடத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கே நாலு பேர் தான் வேலை செய்கிறார்கள். ஆனால் ஊருக்கே அதன் மூலம் வெளிச்சம் கிடைக்கிறது. அந்த நாலு பேர் வேலை செய்யவில்லை என்றால் ஒட்டுமொத்த ஊரும் இருட்டில் மூழ்கிவிடும். அதே போல இந்த வேத விளக்கை சிலர் உயரப் பிடித்திருந்தாலும் அது லோகக்ஷேமம் அளிக்கும்.
• ஸ்ரீ பரமாசாரர்யாளின் பீடாரோஹண நிகழ்ச்சியின் போது, கனகாபிஷேகம் ஏற்பாடு செய்யப்பட்டது. அவர் அதை மறுத்து இந்த ஆர்வத்தை வேத ஸம்ரக்ஷணத்திற்கு ஆவன செய்வதில் திசை திருப்பச் செய்தார்.
• அதனால் எப்படியாவது வேத ஸம்ரக்ஷணம் செய்து அடுத்த தலைமுறைக்கும் அதைக் கொடுப்பது என்பது ஒவ்வொரு ப்ராஹ்மணனின் கடமை. வேதங்கள் காக்கப்பட்டால் அது தான் எல்லோருக்கும் கீர்த்தி. இதனால் ஸகலருக்கும் நன்மை பயக்கும்.