விசேஷ உபந்யாஸம்அதிவேக இயந்திர வாழ்க்கையில் நமது குல ஆசார அனுஷ்டானங்களை அனைவரும் விடாமல் கடைபிடிக்கும் பொருட்டும், அதன் முக்யத்வத்தை அனைவரும் அறியச்செய்யும் பொருட்டும் தர்ம சாஸ்த்ர உபன்யாஸங்கள் அனைத்து அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளிலும், பெருநகரங்களிலும் மற்றும் ஜனத்தொகை குறைவாயுள்ள கிராமப் பகுதிகளிலும் வேத விற்பன்னர்களைக் கொண்டு நடத்திட ஸ்ரீஸ்ரீ பெரியவாளும், ஸ்ரீ ஸ்ரீ பால பெரியவாளும் அனுக்ரஹித்துள்ளார்கள்.

இந்த உபன்யாஸங்கள் அனைவரையும் சென்றடையும் பொருட்டு ஸபை உபந்யாஸங்களை யூட்யூப் தளத்தில் தரவேற்றுகிறது. எனவே இந்த வேள்வியில் அனைவரும் பங்குகொண்டு அவர் தம் இல்லங்களில் இந்த தர்ம சாஸ்த்ர உபன்யாஸங்களை நடத்துவதன் மூலம் நற்பயன் பெறுவதுடன் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சரணர்களின் அனுக்ரஹத்திற்கும் பாத்திரர்களாகும்படி வேண்டுகிறோம். அவ்வாறு நேரில் வர இயலாதவர்கள் இந்த உபன்யாஸங்களை எங்கள் உபந்யாஸ பக்கத்தின் மூலம் பார்க்கலாம்.